வெஸ்ட்மின்ஸ்டர் மடம்
லண்டனில் உள்ள தேவாலயம்வெஸ்ட்மின்ஸ்டர் புனித பீட்டரின் விதிபயில் தேவாலயம் என்ற பெயருடைய, பெரும்பாலும் வெஸ்ட்மினிஸ்டர் மடம் (அபி) என்றே அழைக்கப்படுகின்ற, இந்த தேவாலயம் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை அடுத்து மேற்கில் கோதிக் பாங்கில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் மன்னரின் நேரடி ஆட்சியில், பேராயரின் கட்டுப்பாட்டில் இல்லாது அதேநேரம் மறைவழிகளின்படி (canons) வழிபாடுகளை நடத்தும் அரசரடி விதிபயில் தேவாலயமாகும். இங்கு தான் வழமையாக பிரித்தானிய மன்னர்களின் முடி சூட்டும் விழாவும் ஆங்கில, பின்னர் பிரித்தானிய தற்போது பொதுநலவாய மன்னர்களின் அடக்கங்களும் நடைபெறுகின்றன. சிறிதுகாலம், 1546 முதல் 1556 வரை ,இது கதீட்ரல் என்ற தகுதி பெற்றிருந்தது.
Read article